நேற்றிரவு நடந்தது என்ன? துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது ஏன்? இளைஞன் வெளியிட்ட தகவல்

நாவலப்பிட்டியில் நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

நவலப்பிட்டியில் இருந்து பொல்பிட்டிய ஊடாக மினுவன்தெனிய வரை திருமண நிகழ்விற்காக சென்ற இளைஞர்களின் வாகனத்தின் கண்ணாடி எஸ்.பி.திஸாநாயக்கவின் வாகன கண்ணாடி மீது மோதியுள்ளது.

இதனால் பாதுகாப்பு பிரிவினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் எஸ்.பி.திஸாநாயக்க சம்பவத்தை சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் வாகனத்திற்குள் ஏறியுள்ளார். இந்நிலையில் பாதுபாப்பு பிரிவினர் துப்பாக்கியால் இளைஞர்களை சுட்டமையினால் அவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இளைஞர்கள் மினுவன்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் என குறிப்பிடப்படுகின்றது. தங்களது கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கினிகத்தேன பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் பயன்படுத்திய துப்பாக்கிகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிற்காக எஸ்.பி.திஸாநாயக்க உட்பட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கினிகத்தேன பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்