களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் திறந்து வைப்பு!

களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

களு கங்கை, மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமாகும்.

களு கங்கை, லக்கல பல்லேக பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நீர்த்தேக்க நீரின் கொள்ளளவு 10 இலட்சத்து 248 கனமீற்றர் ஆகும்.

இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீற்றர் என்பதுடன் 68 மீற்றர் உயரம் கொண்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்