எரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும்.

இன்று பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது 50 ரூபாவாக இருந்த அரசி 100 ரூபா,30 ரூபாவாக இருந்த தேங்காய் 70 ரூபா,வெங்காயம் 250 ரூபா,மா 100 இவை அனைத்தும் எமது மக்கள் பயன்படுத்தும் பொருட்களே அது மாத்திரமின்றி எமது மக்கள் இன்று விறகுக்கு பதிலாக (கேஸ்) எரிவாயுவினையே பயன்படுத்துகின்றன இந்த நிலையினை கூட ஒரு நிலைக்கு கொண்டு வரமுடியாத அரசாங்கம் எவ்வாறு மககளின் வாழ்க்கையினை எவ்வாறு சுபீட்சமாக்கும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் கேள்விஎழுப்பினார்.

பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸவின் வெற்றியினை உறுதி செய்யும் முகமாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நேற்று (07) மலை ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
கடந்த நாலரை வருட காலப்பகுதியில் தான் பொருட்களின் விலைகள் வானளவு உயர்ந்துள்ளன.தொடர்ந்து ஐந்து வருடம் ஆட்சி செய்தால் பொருட்களின் விலை எவ்வாறு இருக்கும் நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.இந்த அரசாங்கத்திற்கு நாட்டை ஆளும் சக்தி இல்லை.நீஙகள் குடும்பத்தில் எவ்வாறு நினைப்பீர்கள்.நன்றாக வாழ வேண்டும்,வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் அதே போன்றுதான் ஒரு அரசாங்கம் நினைக்க வேண்டும்.ஆனால் இந்த அரசாங்கத்திற்கு நடத்த இயலாததன் காரணமாகத்தான் நாம் இன்று கஸ்ட்டப் படுகிறோம். கடந்த ஐந்து வருடத்தில் நல்லது செய்திருந்தால் நாம் அவர்களுக்கு மீண்டும் உரிமையை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இன்று நாம் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் இன்னும் ஐந்து வருடத்திற்கு கொடுத்தால் எவ்வாறு இருக்கும்.

ஆகவே நாளை இந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.அண்மையில் தெனியாய பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் உரையாற்றும் போது தெரிவித்தார்.இன்று மலையகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.நான் வந்தால் அவற்றினை திறந்து தொழில் பேட்டைகளை உருவாக்கி.இளைஞர் யுவதிகள் கொழும்பு செல்லாது இங்கேயே தொழில் வாய்ப்புக்களை பெற திட்டம் வகுப்பேன்.
அண்மையில் மட்டக்களப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் விடுதலை புலிகளுக்கு விசுவாமாக இருந்த கருணா அம்மன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இங்கு உள்ளது நீங்கள் போட்ட பாலம் இந்த வீதி நீங்கள் போட்டது. என மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்தார்.

ஆகவே மஹிந்த காலத்தில் தான் பல பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டுள்ளன.தோட்டங்களில் பாதைகள் போட முடியாது என்று கம்பனிகள் தெரிவித்த போது அதனை பொருட்படுத்தாது தோட்டங்கள் தோறும் முதல் முதலில் பாதைகளை போட்டுக்காட்டியவர் மஹிந்த ராஜபக்ஸ.நாம்  அவருக்கு வாக்குகள் அழிக்காமலே அவர் எமக்குரிய அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்தார். ஆகவே நாம் வாக்களித்து அக்கட்சியின் பங்குதாரர் ஆனோமானால் அவர் இதைவிட எமக்கு தேவையான வற்றை பெற்றுக்கொடுப்பார்.

ஒரு கால கட்டத்தில் நாம் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கொழும்புக்கு கூட செல்ல முடியாது.காரணம் வெளியில் சென்றால் தேசிய அடையாள அட்டை பிரச்சினை அவற்றை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்த இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக்ஸ. அதனால் இன்று எமது இளைஞர் யுவதிகள் எல்லா பகுதிகளிலும் சென்று வேலை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே சொல்வதை செய்வது தான் பொது ஜன பெரமுன அரசாங்கம் ஆகவே எதிர்வரும் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரித்து எமக்கு தேவையான அபிவிருத்திகளை உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாறாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன நடந்தது சற்று சிநத்தித்து பாருங்கள்,வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள் எதனையாவது நிறைவேற்றினார்களா?இங்கு எடுத்துக்கொண்டால் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக கூறினார்கள். கொடுத்தார்களா? 50 ரூபா தரப்போவதாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தார்கள் நடந்ததா?தீபாவளி முற்பணம் 5000 ரூபாவால் அதிகரிக்கப் போவதாக தெரிவித்தார்கள் கொடுத்தார்களா?இதை எதனையுமே செய்யாத அரசாங்கம்; இன்று 1500 ரூபா தொழிலாளர்களுக்கு தருவதாக தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.இவ்வாறான ஒரு நிலையில் மீண்டும் எம்மிடம் வந்து எவ்வாறு வாக்கு கேட்கிறது.எனவே இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி செய்ய கொடுத்தால் நாம் மேலும் படு பாதாளத்தில் வீழ்ந்து விடுவோம்.
அது மாத்திரமல்லாமல் ஒரு கட்சி சொல்கிறது எங்களுக்கு வாக்குகளை அழியுங்கள் என்று அதை பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். என்னிடம் நபர் வேலை செய்தார் அவர் அக்கட்சிக்கு எதிராக பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக வாயிலேயே சுட்டுக்கொன்றது.அது மாத்திரமா,எமது மக்களின் தேசிய அடையாள அட்டைகளை பறி;த்தது,தேயிலை தொழிற்சாலைகளை தீயிட்டு கொழுத்தியது.தோட்டப்பகுதியில் ஒரு அச்சமான சூழலினை ஏற்படுத்தியது. அது வேறு யாருமல்ல ஜே.வி.பி. தான் இன்று அவர்கள் ஏதோ உத்தமர் போல் பேசுகிறார்கள.; ஆகவே எமது மக்கள் நன்கு சிந்தித்து சரியான முடிவுகளை எடுத்து இம்முறை வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்