19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது – அனுர

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வணிக சபையில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ரணில் விக்ரமசிங்கவின் அதிகார நோக்கமும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அதிகார நோக்கமும் 19 ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது.

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது. இந்த இரண்டில் ஒன்றை நாம் பின்பற்ற வேண்டும். ஒன்று நாம் முன்னர் இருந்த இடத்தில் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் முழுமையாக நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். எமது யோசனைத் திட்டம் நாடாளுமன்றத்தை கேந்திரமாகக் கொண்ட ஆட்சி முறைமையாகும்.

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பெரும்பான்மை உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் அதனை இரத்து செய்வதற்காக கைகளை உயர்த்துவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்