சஜீத் பிரேமதாசவின் வெற்றி தொடர்பில் சம்மந்தன் ,அப்துல்லா மஃறூப் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று தேர்தல் முன்னெடுப்புக்கள் மக்களுக்கு அன்னச் சின்னத்திற்கு வாக்களிப்பது பற்றியதுமான தெளிவுபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (08) திருகோணமலையில் இடம் பெற்றது..
குறித்த கலந்துரையாடலானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது
இதில் சஜீத் பிரேமதாசவின் வெற்றி தொடர்பிலும் இறுதிப் பிரச்சார தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்