தர்மபுரம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல் நாட்டல்

கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டு பாதீட்டில்  2.5 மில்லியன் முதல்கட்டவேலைக்காகவும்
2020 ஆம் ஆண்டு பாதீட்டில் இரண்டாம் கட்ட வேலைக்காக .2 மில்லியனும்  2019 பாதீட்டில்   நீர்வழங்கலுக்காக 1 மில்லியனும்
வேலி அமைப்புக்காக 0.5 மில்லியனும் மொத்தமாக ஆறு மில்லியன்  ஒதுக்கப்பட்ட நிலையில் நேற்று வைத்தியசாலைக்கான அடிக்கல் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் தலமையில் இடம்பெற்றது முன்னைனாள் மாகாணசபை உறுப்பினரும் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தர்மபுரம் பகுதியில் உள்ள தனது சொந்தக் காணியில் 6 பரப்புக் காணியினை இவ் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு இலவசமாக வழங்கிய நிலையிலையே இவ் அடிக்கல் நாட்டு விழா நேற்று இடம்பெற்றது

இன் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் முன்னாள் மாகாணசபை உப்பினர் குருகுலராஜா பிரதேச சபை உறுப்பினர்களான ஜீவராஜா,சாந்தி,பாலன் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்