கோட்டாவின் வெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம்: சாரதியின் ‘திடுக்’ தகவல்கள் பற்றி குறித்து உடன் விசாரணை ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராகபக்ச தலைமையில் வெள்ளை வானின் ஆட்களைக் கடத்திக் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக கடத்தல் வாகனத்தைச் செலுத்திய சாரதி என்று தன்னை அடையாளப்படுத்திய நபர் வெளிளிட்ட அதிர்ச்சித் தகவல்கள் குருத்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வான் கடத்தல்களின்போது தான் சாரதியாகக் கடமையாற்றியதாகக் கூறி, பொதுமகன் ஒருவர் வெளியிட்ட பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் உடனடியாகப் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“அமைச்சர் ராஜித தலைமையிலான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பூரண அவதானம் திரும்பியுள்ளது. அதன்படி ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபரங்கள், ஒலி மற்றும் ஒளிபரப்புக்களின் பிரதிகளுடன் அது தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை வான் கடத்தல் கொலை விவகாரம் தொடர்பான இந்த உடனடி விசாரணைகள் ராஜபக்ச அணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரியவருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்