வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார்.

வவுனியா வடக்கு கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பாலசுப்பிரமணியம் தர்மிலன் நேற்றுக் காலை முதல் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள் மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றிருந்தார்.நேற்று மாலை நீண்ட நேரமாகியும் குறித்த மாணவன் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிசார், அப்பகுதி இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்ட இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதலை மேற்கொண்ட போது, காட்டுற்குள் கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நீதவானின் வருகையின் பின்னர், மருத்துவ சோதனைக்காக வைத்திசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்