கோட்டாவுக்கு ஆதரவு வழங்கும் ஆளுநர்களை பதவி நீக்கவும் – ஜனாதிபதிக்கு மஹிந்த கடிதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் நான்கு ஆளுநர்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் நான்கு ஆளுநர்கள் பகிரங்கமாக செயற்படுவதாக, தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்தே, ஜனாதிபதியிடம் இந்த விடயம் குறித்து கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட நான்கு ஆளுநர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு தகவல் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்