ஜனாதிபதி தேர்தல் – வழமையைவிட தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடுமுழுவதும் உள்ள 12 ஆயிரத்து 856 வாக்களிப்பு நிலையங்களுக்காக 25 ஆயிரத்து 712 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

6 ஆயிரத்து 86 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடுமுழுவதும் நடமாடும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், 6 ஆயிரத்து 86 சிவில் பாதுகாப்பு தரப்பினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களில் 2 ஆயிரத்து 193 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிகளை மேற்கொள்ளவுள்ளனரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகம் அடக்கும் பணிக்காக ஆயிரத்து 233 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வீதித் தடைகளுக்கான பணிகளை ஆயிரத்து 688 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 190 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் மேற்கொள்ளவுள்ளனரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த கடமைகள் உட்பட ஜனாதிபதி தேர்தலுக்கான ஏனைய கடமைகளுக்காக 60 ஆயிரத்து 175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளை மேற்கொள்ளவுள்ளனரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேலும் சில கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்