குடும்பஸ்தர் மீது மோதிய கார் தப்பியோட்டம்! அநியாயமாக பறிபோன உயிர்!!

மட்டக்களப்பு மாவடி வேம்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது இதன் போது காயமடைந்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில், நேற்று போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த கார் ஒன்று நேற்று காலை 05.00 மணியளவில் பாதையோரமாக நின்ற குடும்பஸ்தரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

பின்னர் குறித்த வாகனம் வந்தாறுமூலையில் வைத்து CTB பஸ் ஒன்றுடனும் மோதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாவடிவேம்பில் விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மாவடி வேம்பு பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை இராசேந்திரன் (50) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலய அதிபரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் பொலிசார் இது குறித்த விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உரிய வாகனத்தை தேடும் நடவடிக்கைகளையும் பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்