16ஆம் திகதி காலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தன்று காலை வேளையில் தோட்ட தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பெப்ரல் அமைப்பு தோட்ட நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் மாலை விடுமுறை வழங்குவது வாக்களிப்பதற்கு சிரமமாக அமையும் என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டி ஆராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்