பரபரப்பான அரசியல் சூழலில் கிங் மேக்கராக மாறிய ஜனாதிபதி மைத்திரி…!! சஜித் பிரேமதாஸாவுடன் அவசர சந்திப்பு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் சஜித் பிரேமதாஸ இன்று காலை இடம்பெறும் மத வழிப்பாட்டில் இணைந்து கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மிகவும் சவால் நிறைந்த களமாக மாறியுள்ளது. இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக ஜனாதிபதியின் ஆதரவு காணப்படுகிறது.

சமகால ஜனாதிபதி ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளருக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இவ்வாறான சூழ்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த தரப்பினர் பதற்றமடைந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெருமளவானோர் முழுமையான ஆதரவினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்