கோட்டா ஆட்சிக்கு வந்தால் கருணா பிள்ளையான் செய்த கொலைகள் மூடி மறைக்கப்படும் – யோகேஸ்வரன்

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் செய்த கொலைகள் அனைத்தும் மூடி மறைக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் ராஜபக்ஷவின் ஆட்சிக்கு வந்தால் ஆயுத கலாச்சாரம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் வீதிச்சோதனைகள் கூடும் என்றும் மாவீரர் தினத்தடை கூட நினைவுகூர முடியாத சூழல் ஏற்படும் என்றும் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கக்கூடிய வகையில் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் செயற்பாட்டின் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்