அரசாங்கத்தால் எந்தவொரு செயற்பாட்டையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது போயுள்ளது – மஹிந்த!

இந்த அரசாங்கத்தால் எந்தவொரு செயற்பாட்டையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது போயுள்ளது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த அரசாங்கத்தினர் அதிவேக நெடுஞ்சாலையை அமைத்திருப்பார்களாயின், கண்டிக்கு 45 நிமிடங்களில் எம்மால் வரமுடியுமாக இருந்திருக்கும்.

ஆனால், இன்று அந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு என்ன நடத்துள்ளது? அது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் பையில் என்று மக்கள் கூறுகிறார்கள்.

நான் எனது அரசாங்கத்தின் காலத்தில், ஒவ்வொரு நகரங்களையும் அழகுப்படுத்திக் கொண்டு வந்தேன்.

எனினும், இந்த அரசாங்கத்தால் எந்தவொரு செயற்பாட்டையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாதுபோயுள்ளது.

இதுதான் உண்மை. எனவே, 16 ஆம் திகதி அனைவரும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்