ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்கவுள்ளார் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சந்திக்கவுள்ளார்.

அதற்கமைய நாளை (வியாழக்கிழமை) இடம்பெறும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அவர்கள் அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுகள், வாக்கு எண்ணும் பணிகள் மற்றும் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால், அவர்களது பிரதிநிதிகள் இருவர் கலந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணியாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்