கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் தூசுப் படிமங்களின் செறிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறல்!

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் தூசுப் படிமங்களின் செறிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கட்டட ஆய்வு பணிமனையின் சிரேஷ்ட நிபுணர் சரத் ப்ரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் வளி தரக்குறியீடு தற்போது 107ஆக நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அது இன்று(புதன்கிழமை) மேலும் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக கட்டட ஆய்வு பணிமனையின் சிரேஷ்ட நிபுணர் சரத் ப்ரேமசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புது டெல்லியில் ஏற்பட்ட வளி மாசடைவு காரணமாக காற்றுடன் தூசு துகள்கள் கலக்கின்றமை இலங்கையில் அதிகரித்துள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் புது டெல்லியில் ஏற்பட்டிருந்த வளி மாசுவினாலேயே இலங்கையிலும் அந்த நிலைமை ஏற்பட்டது என கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என தற்போது கூறப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்