தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்படாது என அறிவிப்பு!

தற்காலிக அடையாள அட்டைக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்றுடன்(புதன்கிழமை) நிறைவடையவுள்ளது.

எந்தக் காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினம் நீடிக்கப்பட மாட்டாது என குறித்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதியாக கடந்த 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வாக்காளர்களின் நலன்கருதி காலஅவகாசம் மேலும் நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுவரை தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று நள்ளிரவுக்குள் கிராம உத்தியோகத்தரிடமோ, அல்லது தோட்ட முகாமையாளரிடமோ அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்