ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பேன் – சஜித் உறுதி!

ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான திறனை வளர்ப்பதற்கு உலகத் தரம் வாய்ந்த ஊடக மேம்பாட்டு மையத்தை நிறுவுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு கீழ் உள்ள ஒரு அரசாங்கம் தொழில்துறையின் சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வதில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்