பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம்

பிரஜாவுரிமையை கைவிடும் சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர் என கருதப்படுவார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

குறி;ப்பிட்ட சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

பட்டியலில் அவரது பெயர் வெளியாவது வேறு விடயம் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நன்சி வன்கொம் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமைய துறந்தவர்கள் குறித்த பட்டியலில் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சட்டங்களின் அடிப்படையில் தனிநபர் குறித்து கருத்துதெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ஒருவரின் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையத்தில் பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமையை கைவிடும் நடவடிக்கைகளை அமெரிக்க தூதரகமே கையாள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபரின் பெயர்  பட்டியலில் வெளியாவது  வேறு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜாவுரிமையைகைவிடுவது தொடர்பான ஆவணங்கள் தூதரகத்திற்கு சமர்ப்பிக்கப்படும், பின்னர் அந்த ஆவணங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பபடும் என தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் குறிப்பிட்ட நபரிற்கு குடியுரிமையை கைவிடுவதை உறுதி;ப்படுத்தும் சான்றிதழ்  கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்