கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கல்முனையில் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து இறுதி பிரசார கூட்டம் ஒன்றினை புதன்கிழமை(13) தமிழ் தேசிய கூட்டமைப்பு மாலை 3 மணியளவில் ஏற்பாடு செய்திருந்த நிலையில் மக்கள் எவரும் குறித்த நேரத்திற்கு வருகை தராமையின் காரணத்தினால் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி விடுதலைபுலிகளின் புரட்சி பாடல் திடிரென ஒலிபரப்ப பட்டது.

இதன் போது கல்முனை பொலிஸாருக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார் சந்தேகத்தில் குறித்த கூட்டத்திற்கு ஒலிபரப்பு ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்