சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விஷேட கலந்துரையாடல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

தமிழ் பேசும் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத தலைவர்கள், அரச அதிகாரிகள்,சிவில் சமூக பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல்  இன்று வியாழக்கிழமை (14) காலை இடம்பெற்றது.

அகம் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர் அழகுராசன் மதன் ஏற்பாட்டில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் தலைமையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நடைபெற்றது .
நாட்டில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களின் பின்னர் இன ,மதங்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையின் பின்னர் சமூகங்களிடையே ஒற்றுமையையும் நோக்கோடு கடந்த ஜுலை மாதம் முதல் ஒவ்வொரு மத தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து மத நல்லிணக்கம் சம்பந்தமாகவும், பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர், கலாச்சார உத்தியோகத்தர்கள்,இளைஞர்களையும் ஒன்றிணைத்து பல்வேறு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடல் செயலமர்வுகள்  வகையில் நடைபெற்று வந்தன .
இதன் தொடர்ச்சியாக இன்று  ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மக்கள் மனநிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதனை அறிந்து கொள்வதற்காக  மீளாய்வு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்