கௌதாரிமுனை இயற்கை வள அபகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சட்டவிரோதமாக மண் அகழ்வு செய்யப்படும் பூநகரி கௌதாரிமுனை பிரதேசத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் விஜயம் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடினார்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தின் வளம்நிறைந்த அழகிய கிராமமாகவும் அதிக மண் வளம் நிறைந்த  பூர்வீக கிராமமாக 3000 வருடங்களாக மக்கள் வாழ்ந்து வரும் இடமாகவும் இருக்கும் கௌதாரி முனையில்
பூர்வீக ஆலயமான மண்ணித்தலை சிவன் ஆலயம்  இக் கிராமத்துக்கு பழம்பெரும் வரலாற்றை பறைசாற்றி நிற்கின்றது
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த நிலையிலும் தற்பொழுது இக்கிராமத்தில் 135 குடும்பங்களே வசித்து  வருகின்றார்கள்
இக் கிராமத்தில் காணப்படும் இயற்கை வளங்களை சுரன்டும்  பல்வேறு முயற்சிகள் பல்வேறுபட்ட தரப்பினராலும் மேற்கொள்ளப்படுவதோடு மக்களுக்கு அற்ப ஆசைகளை காட்டி அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி கவனத்தை  திசை திருப்பி அவ்விடங்களை அபகரிக்க பலர் முயற்சிக்கின்றனர்
இலங்கையிலேயே சில இடங்களிலேயே காணப்படும் மண் வளம் இப்பிரதேசத்தில் அதிகமாக காணப்படுவதாலும் அழகான கடற்கரை  சூழல் காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பப்படுகின்ற இடமாக இது காணப்படுகின்றது.
குறித்த பிரதேச மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகக் குழுவினர்
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் விஜயம் மேற்கொண்டு இது தொடர்பாக ஆய்வு செய்திருந்தனர் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளை கவனித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கௌதாரிமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் பூபாலபிள்ளை மற்றும் கட்சியினுடைய அமைப்பாளர்கள் பிரதேச மட்ட அமைப்பினர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்