நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், அதிகாரிகள் குறைவாகவுள்ள பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வடக்கு, கிழக்கிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை