ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை 3900 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை 3900 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4 மணியான காலப்பகுதி வரை 3905 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 27 முறைப்பாடுகளும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 3771 முறைப்பாடுகளும் இவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 84 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்