க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் ஆரம்பம்!

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நான்காயிரத்து 987 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 7 லட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்