வவுனியாவில் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்படும் பணிகள் நிறைவு

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும் பணிகள் இன்று (15.11.2019) காலை 7.30 மணி ஆரம்பமாகி 10.30மணியுடன் நிறைவுக்கு வந்தன.

தற்போது வவுனியா மாவட்ட செயலகம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்