கோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

பிரிமா கோதுமை மாவின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பிரிமா நிறுவனம் நேற்று (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு இதனை அறிவித்துள்ளது.

எனினும் 1 கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 8 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிமா கோதுமை மாவின் புதிய விலை 104.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் பிரிமா நிறுவனம் விலை அதிகரிப்பு செய்த போது அரசாங்கத்தின் கோரிக்கையையடுத்து விலை குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்