சுன்னாகம் பெற்றோல் செற்றில் தேர்தல் பரப்புரை; பொலீஸ் உடந்தை! ஆட்சிமாறினால் தூக்குவோம் என மிரட்டப்பட்ட தேர்தல் அதிகாரி

சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்துத் தேர்தல் விதிமுறை களை மீறி ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கான பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை விசாரணைசெய்யச் சென்ற தேர்தல் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவிக் கப்பட்டதுடன், அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

இந்தத் தேர்தல் விதிமுறைமீறலுக்கு பொலீஸார் ஒத்துழைப்பு வழங்கியமையுடன், செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்த செய்தியாளரின் அலைபேசியைப் பறித்தெடுத்து அதிலிருந்த சம்பவம் தொடர்பான ஒளிப்படங்களையும் பொலீஸ் உத்தியோகத்தர் அழித்துள்ளார்.

இந்தச் சம்பவம் சுன்னாகம் கே.கே.எஸ். வீதி றொட்டியாலடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுப்பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தேர்தல் விதி முறைகளை மீறிப் பரப்புரை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்கும் ஊடகங்களுக் கும் அழைப்புகள் வந்தன.

அங்கு இளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகச் சிலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்துக்குட்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலைய அதிகாரி சம்பவ இடத் துக்கு விரைந்தார். அங்கு செய்தியாளர் ஒருவரும் சென்றிருந்தார்.

அங்கு 30 பேருக்கு மேற்பட்ட இளையோர்கள் நின்றனர். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பரப்புரைகள் நிறைவடைந்து வாக்களிப்புக்கான பணிகள் இடம்பெறும் காலத்தில் ஆகக் கூடியது 7 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூட முடியாது.

அதனால் அங்கு கூடியிருந்த வர்களை அப்புறப்படுத்துமாறு தேர்தல் அதிகாரிபொலிஸாருக்குப் பணித்தார். அத்துடன், அங்கு சுன்னாகம் பொலிஸ்நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அதனை அடுத்து தேர்தல் அதிகாரி அங்கிருந்து புறப்பட்டார். எனினும் சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்துக்குத் திரும்பி வந்தார். அப்போதும் அங்கு இளையோர்கள் கூடியிருந்தனர். அதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்து விசாரணைகளை முன்னெடுத்தார். எனினும் தேர்தல் அதிகாரியின் கடமைக்கு அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்தமையுடன், அலை பேசியில் அழைப்பு எடுத்த ஒருவர் ஆட்சி மாறினால் உம்மைத் தூக்குவோம் என அச்சுறுத்தும் பாணியில் உரையாடினார் என அறியமுடிகிறது.

மிரட்டலுக்கு அஞ்சாத அந்த அதிகாரி அங்கிருந்த ஆவணங்களைச் சோதனையிடப் போவதாகக் கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரின் பரப்புரைத் துண்டறிக்கைகள் காணப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸார் உரிய விசாரணையை முன் னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு  தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல் வழங்கினார்.

எனினும் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்காததால், யாழ்ப் பாணம் தேர்தல்கள் அலுவலகத் துக்குப் பொலிஸ் பொறுப்பதிகாரியை வருமாறு கூறிவிட்டு தேர்தல் அதிகாரி அங்கிருந்து புறப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் அங்கு ஒளிப்படம் எடுத்துச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அவரை அழைத்த பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவர், அலை பேசியை வழங்குமாறு கூறி யுள்ளார். தன்னை ஊடகவிய லாளர் என அரச தகவல் திணைக்கள அடையாள அட்டை யைக் காண்பித்து அறிமுகம் செய்தார். அடையாள அட்டையை வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர், செய்தியாளரிடமிருந்து அலை பேசியையும் பறித்துள்ளார்.

அலைபேசியில் இந்தச் சம் பவம் தொடர்பில் இருந்த ஒளிப் படங்களை அழித்த அந்த பொலிஸ் உத்தியோகத்தர், காணொலிப் பதிவும் இருக்கின்றதா என்று ஆராய்ந்துள்ளார்.

அதன் பின் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரியிடம் ஊடகவியலாளரின் அடையாள அட்டைகளையும் அலைபேசியையும் அந்தபொலிஸ் உத்தியோகத்தர் ஒப்படைத்துள்ளார்.

அதனையடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிஊ கவியலாளரிடம் அடையாள அட்டைகளையும் அலைபேசியையும் மீள வழங்குமாறு கூறினார். அதன்பின்னர் அந்தப்பொலிஸ் உத்தியோகஸ்தர் கைபேசியில் உள்ள படங்களை அழித்த பின்னர் அதனைக்கையளித்தார்.

சம்பவம்தொடர்பில்பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் ஊடகவியலாளர் முறைப்பாட்டை வழங்கினார்.

இதேவேளை, இந்தச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று அறிய முடிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்