ஸ்ரீநேசன், துரைராஜசிங்கம் வாக்களித்தனர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் ஆரம்பமாகியுள்ள இந்த வாக்களிப்பு நடவடிக்கைகளில் மக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முட்டக்களப்பு மைக்கேல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையிலான மதகுருமார்கள் வாக்களித்ததுடன், அனைவரும் தமது கடமையினை செய்யவேண்டும் என ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு சிசிலிய பெண்கள் தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்