போலி வாக்குச்சீட்டுக்களுடன் தலவாக்கலை நகரசபையின் உப.தலைவர் கைது

போலி வாக்குச்சீட்டுக்களுடன் தலவாக்கலை நகரசபையின் உப.தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸாரினால் குறித்த சந்தேகநபர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 211 போலி வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள தலவாக்கலை நகரசபையின் உப.தலைவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்