கல்முனையில் சில பிரதேசங்களில் மக்களை மிரட்டும் அரசியல்வாதிகள்

நாடு பூராவும் நடைபெற்றதுவரும் சனாதிபதி தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களிக்க வரும் மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி சார்பாக வாக்களிக்க வலியுறுத்தி வருகின்றதை காணமுடிந்தது .

குறிப்பாக கல்முனை தேர்தல் தொகுதியில் இந்நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்படுகிறது.இச்செயற்பாட்டை கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திர சேகரன் ராஜன் கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் அமைந்துள்ள வாக்கு சாவடி மற்றும் கல்முனை மாமாங்கம் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடிக்கு அருகாமையிலும் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தினர்.

இதன் போது திடிரென வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வந்த சுபத்ரா ராமய விகாராதிபதி சங்கரத்ன தேரர் வாக்கு சாவடியில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிசாரிடம் நீதியான தேர்தலை நடார்த்த மக்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க நிர்பந்திப்பவர்களை வாக்கு சாவடிக்கு அருகாமையில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி சென்றார்.

இதனை தொடர்ந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் செலஸ்ரினா கார்மேல் பற்றியா கல்லூரிக்கு அருகாமையில் நின்று மக்களை மிரட்டும் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தார்.

இதே வேளை சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே உள்ள பள்ளிவாசல் ஒன்றில்சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் நிலவியது.மேலும் பிக்குவை பலவந்தமாக வெளியேற்றியதை காணமுடிந்தது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்