2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெற்று வருகின்றன

2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெற்று வருகின்றன இன்று(16) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய துரிதமாக நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக இம் மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் அதே வேளை தமிழ் பிரதேசங்களிலும் வாக்களிப்பில் முக்கியத்துவம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வாக்களிப்பு நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பும் பொலிஸின் நடமாடும் பாதுகாப்பு சேவையும் நடைபெற்று வருவதையும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடவடிக்கையை கண்காணித்து வருவதுடன் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் கண்காணித்து வருகின்றனர்.

வாக்களிக்க முடியாத வயோதிபர்களுக்கு போக்குவரத்து வசதிகளும் தேர்தல் திணைக்களம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்