கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் காலை 10 மணிவரை 30 வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது என தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்…

காலை 10 மணிவரை 30 வீதம் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. என கிளிநாச்சி தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் அமைதியான முறையில் தமது வாக்குகளை தொடர்ந்தும் பதிவு செய்து வருவதாகவும், இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்த அவர், தொடர்ந்தும் 100 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கு பதிவுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்