2019 ஜனாதிபதி தேர்தல்: 3 மணிவரையிலான வாக்குப்பதிவுகளின் விபரம் இதோ!

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளன.

இதுவரையில் நாடளாவிய ரீதியாக 3 மணி நிலவரத்தின்படி,  60 விகித வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி,

  • கண்டி – 75%
  • பொலநறுவை – 75%
  • நுவரெலியா – 75%
  • மாத்தளை – 72%
  • மாத்தறை – 72%
  • காலி – 71%
  • திருகோணமலை – 70%
  • குருநாகல் 75%
  • வவுனியா – 72%
  • களுத்துறை 70%
  • அம்பாறை – 65%
  • மட்டக்களப்பு 65%

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்