சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியாக சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்