அம்பாறை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு9.30 க்கு-அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமாகிய டி.எம்.எல் பண்டாரநாயக்க…

திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில் 80 வீதமான வாக்குகள் பதிவாகி உள்ளதாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமாகிய டி.எம்.எல் பண்டாரநாயக்க  தெரிவித்தார்.

வாக்குபெட்டிகள்  தற்போது  அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள  ஹாடி உயர் தொழிநுட்பவியல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குபெட்டிகள் வந்தவண்ணம் உள்ளன.இருந்த போதிலும் தெஹியத்த கண்டியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குபெட்டிகள் வருவது தாமதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.காரணம் அதன் தூர அமைவிடமாகும்.இருந்த போதிலும் முழுமையாக 10 மணியளவில் வாககு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும்  பிற்பகல் 5.15 மணியில் இருந்து  அம்பாறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இரவு 9.30 மணியளவில் முழுமையாக எண்ணி முடிவடையும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்