நுவரெலியா மாவட்டத்தில் 80 வீதமான வாக்களிப்பு நிறைவு…

(க.கிஷாந்தன்)

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்தது. எனினும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது.

5 மணி வரை 80 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

காலை வேளையில் வாக்களிப்பில் மந்தமாக காணப்பட்டாலும், பகல் வேளையில் வாக்களிப்பு வீதம் அதிகரிகத்து காணப்பட்டது. 488 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 2 மணிக்கு பிறகு அறிவிக்கப்படும் என நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்