கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு வீதமானது 73.19 வீதம் ஆகும்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆனது அமைதியாகவும் நீதியாகவும் இடம்பெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 83531 வாக்காளர்களில் 73.வீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
தற்பொழுது வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து ஏழு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட கொண்டிருக்கின்றன மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் கிளிநொச்சி மாவட்டச்  செயலக வளாகத்திற்கு எடுத்துவரப்படுகின்றன. எழு வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணும்  பணிகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்