தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்தக் கோட்டா அழைத்தால் நாம் தயார் மாவை எம்.பி. அறிவிப்பு

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எம்முடன் பேச்சு நடத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.”

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்திருந்த போதிலும், கோட்டாபய ராஜபக்சவே வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்துத்தான் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதவளித்தனர். எனினும், நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் எம்முடன் பேச்சு நடத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்வரும் தினங்களில் இது குறித்து ஆராயப்படும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்