மக்களின் ஆணைக்கு ஐ.தே.க.மதிப்பு கொடுக்க வேண்டும்- ஹெகலிய ரம்புக்வெல

மக்களின் ஆணையை மதித்து தற்போதைய அரசாங்கம் முடிவெடுக்குமென நம்புவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் ஊடாக நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதாவது கோட்டாபய ஜனாதிபதியானவுடனே கொழும்பு பங்குச் சந்தையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.

இதேவேளை கடந்த தேர்தலில் மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி தேர்தலிலும் கூட மக்கள் ஐ.தே.க.யை நிராகரித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆணையை மதித்து, சிறந்த முடிவை இந்த அரசாங்கம் எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்