வெள்ளை வேன் சாரதி என காட்டியவரை சட்டத்தின் முன் நிறுத்தி விசாரனை மேற்கொண்டிருக்க வேண்டும்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே ஆன போட்டியாகும் என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சி தொடர்பாக பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக  கல்முனையில் அமைந்துள்ள  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவரது அலுவலகத்தில் இடம்பெற்ற   ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை(18) மாலை 9  மணியளவில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இலங்கை சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரமுடைய 7வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவானதை அடுத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சி என்ற வகையில் முஸ்லிம் உலமா கட்சி தனது பாராட்டுக்களையும்இ வாழ்த்துக்களையும் தெரிவித்தது.புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச  தனது பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர்இ அரச அலுவலகங்களில் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ அல்லது அமைச்சர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்த கூடாது என்றும் அரச இலட்சினைகள் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் கூறியது வளம்மிக்க எதிர்காலத்திற்கான ஒரு முன்னுதாரணமே ஆகும்.

கடந்த தேர்தல் காலங்களில் முஸ்லிம் தலைமைகள் எங்களது பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். அவர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது,  அவர் வாக்களிக்க முடியாது , அவரின் மனைவி, பிள்ளைகள் வாக்களிக்க முடியாது, என்று பல பொய் பிரச்சாரங்கள் செய்தும் கடைசியில் இந்த முஸ்லிம் தலைமைகள் பொய் ஆகிவிட்டதுஇ நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே ஆன போட்டியாகும் என நடைபெற்று முடிந்துள்ளது.

தொடர்ந்தும்   கருத்து தெரிவிக்கையில்  தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் இன்று அந்த முடிவுகளிற்கு அமைய வட கிழக்கை வேறாக பிரித்து காட்டியதும், சிறுபான்மை சமூகங்களை காட்டி கொடுத்த பெருமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பவற்றையே சாரும். தனது சொந்த சுய நலனிற்காக செயற்படுபவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் காணப்படுகின்றார். கண்டிப்பாக அவர் அரசுடன் இணைந்து செயற்படும் தன்மை காணப்படுகின்றதுஇ இங்கு தோற்றுப்போனவர்களாக வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றனர் .அத்துடன்  வெள்ளை வேன் சாரதி என்று ஒருவருக்கு தாடி மீசை வைத்து ஊடகங்களுக்கு வெள்ளை வேன் சம்மந்தமான உண்மைகளை சொல்கின்றார்கள் அவர் தான் வெள்ளை வேன் சாரதி என்றால் உடனே அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி விசாரனை மேற்கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் பழி சுமத்துபவர்களாக தான் இருந்தார்கள். கோடடாபய ராஜபக்ஷ தூர நோக்குள்ள தலைவர் .இதில் மக்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும் .முஸ்லிம் கட்சி தலைவர்கள் கட்சியையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் ஆனால் அவர்கள் பின்னர்  தங்களை மட்டும்  பாதுகாத்து கொள்கின்றனர். ஆனால் கடந்த அரசில் வர்த்தமானி வெளியிட்டும் முஸ்லிம் ஆசிரியர் 150 நியமனம் வழங்கப்பட்டது  பெற்று கொடுக்க வில்லை .நாட்டில் உள்ள அனைத்து உலமாக்களையும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் .இதன் மூலம் எமது உரிமைகள் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்பவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஏஜன்ட் ஆக செயற்படுகின்றார். 2005 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டு 2006 ல் அமைச்சுப்பதவிக்காக எதிரணியுடன் கைகோர்த்தார். இவரால் தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சந்தர்ப்பவாதிகளாக சர்வதேசத்தில் பார்க்கப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தவிர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததுடன் சிறுபான்மை மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் தான் தமிழ் முஸ்லிம் மக்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டு, பிழையான முடிவை எடுத்தார்கள், தமிழ் முஸ்லிம் மக்களை பிரித்து காட்டிக்கொடுத்து விட்டு இன்று அரசுடன் இணைய முயல்கின்றார்கள் என    தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்