ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் ஜனாதிபதி இன்றிரவு விசேட சந்திப்பு..!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு 7.00 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவும் இக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இக் கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால முயற்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுவதுடன் புதிய அரசாங்கத்தை நிறுவுவது, நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்