சீனி- பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இடம்பெற்று வரும் நிலையில் சீனி, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில் 1 கிலோ சீனியின் விலை 3.00 ரூபாய்யினால் குறைவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைவடைந்திருப்பதே இதற்கு காரணமாகும். எனினும் பல நாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த விலை குறைவடைந்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நேர காலத்துடன் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்