முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவில் 254 சிறைக் கைதிகள் விடுதலை”

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 254சிறைக் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய பொது மன்னிப்பின் கீழ் மேற்படி 254சிறைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆட்கடத்தல் உள்ளிட்ட பாரிய 30குற்றங்களுக்குட்பட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்படவில்லை.

சிறு குற்றங்கள் புரிந்துள்ள 65வயதுக்கும் மேற்பட்டவர்களே பெரும்பாலும் விடுவிக்கப்பட்டனர். கடந்த 3மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலைகள் தலைமையகம் ஜனாதிபதிக்கு வழங்கிய பட்டியலுக்கு அமைய கடந்த 13ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி 254சிறைக் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அனுமதியை வழங்கியிருந்ததார் என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்