சஜித்தை சந்திக்க திரண்ட மக்கள் படையெடுப்பு ~கண்ணீரில் மூழ்கியது கொழும்பு !

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸவை சந்திப்பதற்காக பெருந்திரளான மக்கள் கொழும்பு வொக்ஷோல் வீதியிலுள்ள அவரது அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு நன்றி கூறுவதற்காக சஜித் பிரேமதாஸ இன்று பகல், ஸ்ரீகொத்தவில் விசேட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

எனினும் ஸ்ரீகொத்த நிர்வாகத்தினால் அது மறுக்கப்பட்ட நிலையில், கொழும்பு வொக்ஷோல் வீதியில் தேர்தல் பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தை சென்றடைந்தார் சஜித் பிரேமதாஸ.

இதனையடுத்து பெருந்திரளான மக்கள் அங்கு சென்று சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஆறுதல் கூறுவதோடு கண்ணீர்விட்டு அழுத காட்சிகளும் பதிவாகியுள்ளன.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்