ஜனாதிபதியை சந்தித்தார் சீன தூதுவர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் H.E. Cheng Xueyuan இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்