வடக்கு, மலையகத்தில் சொற்ப வாக்கு கிடைத்தும் டக்ளஸ், தொண்டமானுக்கும் அமைச்சு பதவிகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இதன்போது அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.

வடக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகியவற்றில் கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் சொற்ப வாக்குகளே பெற்றார். அவருக்கான பிரசார நடவடிக்கைகளில் டக்ளஸ் தேவானந்தா வடக்கிலும் மலையகத்தில் தொண்டமானும் ஈடுபட்டனர். ஆயினும் கோட்டாவின் புதிய அமைச்சரவையில் இன்றுடக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் ஆகிய இருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்