எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானம்?

எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எரிபொருட்களில் விலை மாற்றம் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்