டக்ளஸூக்கு கடற்றொழில் அமைச்சு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு சில தினங்கள் மாத்திரமே அவர் அமைச்சராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்